Politics

”புளுகு மேல் புளுகு” : கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த சுப்பிரமணிய சுவாமி!

கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் உலறிக் கொட்டி பல முனையிலிருந்து வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் விழிப்பிதிங்கி நிற்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்குப் பிரதமர் மீது என்ன கோவமோ தெரியவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமரையும் கோத்துவிட்டு அடிவாங்கி வருவதை வேடிக்கை பார்த்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே பிரதமர் மோடியைக் கண்டபடி வறுத்தெடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசி இருக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, "ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரம் பா.ஜ.கவிடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு. இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மக்களின் விதி. என்ன கொடுமை, பாருங்கள்..

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் பேசுபவர்கள். மக்கள் மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து உடல் நடுங்குகின்றனர். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடுகின்றனர். அவர்களுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வெற்று தலைவர்கள் சொன்ன யோசனைதான் கச்சத்தீவு விவகாரத்தை புதிதாகக் கிளப்பலாம் என்பது.

பிரச்சினைக்குத் தீர்வு எதையாவது சொல்கிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இவர்கள் சொல்லும் மோசடி கதைகளை கேட்டு, தமிழக மீனவர்கள் பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடுவர் என்று நம்பினால், அதைவிடப் பெரிய அபத்தம் கிடையாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”10 ஆண்டுகளாக பொய் மட்டுமே பேசும் பிரதமர் மோடி” : தயாநிதி மாறன் MP விமர்சனம்!