Politics

ஆட்சி மாறி, அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க! : கருத்து கணிப்புகளை மறக்கடிக்க ஒரு புதிய நாடகம்!

ஒரு அதிகாரத்துவ மனநிலை கொண்ட கட்சி, ஆட்சியில் இருந்தால் தனக்கு தேவையான பலதை செய்து கொள்ளும். ஆனால், அது ஆட்சி மாற்றத்தின் போதே, தெள்ளத்தெளிவாக வெளிவரும் என்பதை கடந்த 70 ஆண்டுகால அரசியல் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.

இவ்வகையிலேயே, தமிழ்நாட்டில் 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க செய்த அட்டூழியங்கள் பல, திராவிட மாடல் ஆட்சியில் அம்பலப்பட்டு போனது.

இந்நிலையில், அ.தி.மு.க.வை விட, 100 மடங்கு கொடூரமான ஆட்சி நடத்தும் பா.ஜ.க, இழைக்கின்ற கொடுமைகள் அம்பலப்பட்டு போகுமோ என்ற அச்சத்தில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்திகளை கையாண்டு வருகிறது.

அதில் முதன்மை உத்திகளாக எண்ணப்படுவதே, 400 இடங்களில் வெற்றி பெறுவோம் உள்ளிட்ட பா.ஜ.க.வின் முழக்கங்கள்.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, “400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க கூவி வருவது, குழப்பத்தை உண்டாக்குகிற உத்தி. அரசியல் வட்டார தகவலின் படி, உளவுத்துறை வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பா.ஜ.க, 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே அரிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சமாளிக்கவே, 400 என்கிறது பா.ஜ.க” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பா.ஜ.க.வின் திருட்டுத்தனங்களை, அதாரத்துடன் அமபலப்படுத்தி வருகிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “முதலில் 200 தொகுதிகளில் வென்று காட்டுங்கள்” என சவால் விட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களும், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசால் பெறப்பட்ட ரூ. 150 இலட்சம் கோடி கடன் உள்ளிட்ட பலவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இத்தகைய தகவல்கள் மக்களை சென்றடையாமல் தடுக்க, கச்சத்தீவு என்ற சிக்கலை கிளறி விட்டது போலவே, 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பொய் பிரச்சாரத்தையும் கிளறிவிட்டுள்ளது பா.ஜ.க.

இந்தியா கூட்டணியின் வலு, நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், பா.ஜ.க நிர்வாகிகளும், தங்களின் அதிகாரத்துவ அரசியலை தக்கவைக்க பாடுபட்டு வருகின்றனர்.

ஊழலை தடுப்போம் என்று கூறும் ஒன்றிய பா.ஜ.க தான், நாட்டின் மிகப்பெரிய ஊழல்காரர்களை கட்சியில் இணைத்து வருவது அம்பலப்பட்டுவிடுமோ என்றும்,

2014-ல் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம், முதலமைச்சர்களை பிரதமர் பதவிக்கு இணையாக முன்னிறுத்துவோம் என்ற வாக்குறுதிகள் தந்த பா.ஜ.க, ஆட்சிக்கு பின், மாநில உரிமைகளை நசுக்கி, மாநில முதலமைச்சர்களை சட்டவிரோதமாக கைது செய்து வருகிறது என்ற உண்மை, பல்வேறு சான்றுகளுடன் வெளிப்பட்டுவிடுமோ என்றும்,

வாரிசு அரசியலை விமர்சிக்கும் பா.ஜ.க.வில் தான், வாரிசுகள் பல்வேறு சலுகைகளுடன் கொளுத்து வருகிறார்கள் என்ற உண்மை பொது வெளிக்கு அறியப்பட்டுவிடுமோ என்றும்,

இராணுவ பலத்தில், இந்தியாவை விஞ்ச ஆளில்லை என்ற நிலைப்பாடு சுக்கு நூறாகி, சீனாவிற்கு இந்திய நிலங்கள் தாரைவார்க்கப்பட பா.ஜ.க தான் காரணம் என்றும்,

வேலைவாய்ப்பும், வறுமையும், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமையும், பா.ஜ.க.வினால் உருவாக்கப்பட்டவை என்றும், மக்கள் அறிந்தால் இனி, காலத்திற்கும் ஆட்சியில் வர இயலாது என்ற அச்சத்தில் அங்கும் இங்கும் பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறது பா.ஜ.க.

Also Read: “400லாம் இருக்கட்டும், முதலில் 200-ஐ தாண்டுங்கள் பார்க்கலாம்...” - பாஜகவுக்கு நேரடியாக சவால் விட்ட மம்தா!