Politics

இது கூட தெரியாதா ? தவறான முத்திரைத்தாளில் வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை- நிராகரிக்காத தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து எதிர்கொண்ட நிலையில், தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்த தேர்தலில் தான் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து, போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

ஆனால், கட்டாயம் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று பாஜகவின் டெல்லி தலைமை உத்தரவிட்ட நிலையில், வேறு வழியின்றி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலை சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணாமலையை பாஜக அறிவித்தது.

அதன்படி அவர் தனது அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அப்போது தேர்தல் தேர்தல் விதிகளுக்கு மாறாக, நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது அம்பலமானது. இதனால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி, பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை அனைத்து கட்சிகளும் சுட்டிக்காட்டிய நிலையிலும் அவரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் நடுநிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

Also Read: "பாஜக சொல்வதை செய்வதே அமலாக்கத்துறையின் நோக்கம்! " - அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் !