Politics
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.466 கோடியை கொடுத்தது யார் ? பாஜகவின் ஊழலை மறைக்கும் SBI !
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யார் யார் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது குறித்த விவரத்தையும் SBI வெளியிட்டது.
அதில், SBI வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மொத்தம் ரூ.12,156 கோடி மதிப்பிலான 18,871 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது . அதே காலகட்டத்தில் 20,421 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் வங்கியில் டெபாசிட் செய்து ரூ.12,769 கோடியை பெற்றுள்ளன.
இதன் மூலம் SBI வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திரங்களை விட 1,550 தேர்தல் பத்திரங்களை கூடுதலாக அரசியல் கட்சிகள் வங்கியில் டெபாசிட் செய்து ரூ.466 கோடியை அதிகமாக பெற்றுள்ளது. இதில் ரூ.466 கோடியை பாஜக பணமாக மாற்றியுள்ள நிலையில், அந்த தேர்தல் பத்திரங்களை SBI வங்கியிடமிருந்து யார் வாங்கினார்கள் என்ற விவரங்களை SBI வெளியிடாதது சர்ச்சையாகியுள்ளது. இதன் மூலம் யாரை காப்பாற்ற SBI இந்த செயலில் ஈடுபட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!