Politics
பா.ஜ.க.வின் உண்மை நோக்கங்களை உணர்ந்த ‘ராஜஸ்தான்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
யார் உயிர்வாழ வேண்டும், நாங்களா அல்லது உழவுக்குப் பயன்படாத மாடுகளா? இந்த அரசாங்கம் எதை விரும்புகிறது? தனது ஒரு இணை காளைகளை விற்க முடியாமல் தவிக்கும் ராஜஸ்தான் விவசாயி ஒருவரின் கோபக்குரல் அது.
உலகிலேயே பசு மாடுகளின் புனிதத்தை காக்க ஒரு அமைச்சகம் அமைத்து செயல்பட்ட மாநிலம் ராஜஸ்தான். பாஜக வென்றால் பசு அமைச்சகம் அமைக்கப்படும் என கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி, பாஜக ஆட்சியமைத்ததும் பசு அமைச்சகம் அமைக்கப்பட்டது.
பசுவின் புனிதத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட அமைச்சகத்தின் முதல் அமைச்சரானார் தேவாசி எனும் சாமியார். எனினும் பசு, பால் தந்ததே தவிர ஓட்டு தரவில்லை. அதன் காரணமாக அடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்தது.
பா.ஜ.க பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு உயர் சாதிகளின் உதவியோடு வெற்றி பெறும் ஒவ்வொரு தேர்தல்களிலும், இது போன்ற மூட நம்பிக்கை சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும். பின்பு, மக்களிடம் குட்டுப்பட்டு தோல்வியடையும். பா.ஜ.க எனும் காவி பயங்கரவாதம் முடிவுக்கு வரப்போகும் ராஜஸ்தான் மாநிலத்தை பற்றிய தேர்தல் வரலாறு இதோ.
தேசிய கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க செல்வாக்கு பெற்ற மாநிலங்களில், ராஜஸ்தானும் ஒன்று.
இந்தியா விடுதலையடைந்த பின், 1948 - 1950க்கு இடைப்பட்ட காலத்தில், ராஜஸ்தானில் முதலமைச்சர் பதவிக்கு மாற்றாக, பிரதமர் (ராஜஸ்தானை நாடாக கருதி) ஆட்சியே நடந்து வந்தது.
இந்தியா குடியரசாக்கப்பட்டதற்கு பின், பிரதமராட்சி கலைக்கப்பட்டு, மாநில தகுதி வழங்கப்பட்டு, ராஜஸ்தானின் பிரதமராக இருந்த ஹிரலால் சாஸ்திரி, முதல் முதலமைச்சராக பதவியேற்றார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரலால் சாஸ்திரியை அடுத்தும், பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே, ராஜஸ்தானில் ஆட்சி செய்தது. எனினும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் நிலைத்தது.
1990 களில், மத அரசியலை மிக வேகமாக முன்னெடுத்த பா.ஜ.க, பல மாநில மக்களுக்கு மதசாயல்களை பூசி வந்தது. அதில் சாயமடைந்தவர்களில், ராஜஸ்தான் மக்களும் அடங்க நேரிட்டது.
எனினும், அவர்களின் கொடுமை அரசியல் போக்கின் காரணமாக, ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு இடையே ஆட்சி மாற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இவ்வேளையில், 2023 டிசம்பரில் வெளியான, சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி, பெரும்பான்மை பெற்று, பா.ஜ.க ஆட்சி அமைத்தது.
ஆட்சியமைத்து சுமார் 85 நாள்களே ஆகியுள்ள நிலையில், அம்மக்களின் நிலை மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் தராமல் தாமதிப்பது, நக்ஸலைட்களை தடுக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை வஞ்சிப்பது போன்ற எண்ணற்ற சிக்கல்கள் எழத்தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக, மக்களில் ஒருவரான, மக்களவை உறுப்பினர் ராகுல் கசுவான் பா.ஜ.க.விலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளார்.
ராகுல் கசுவான் அவர்களின், தந்தை நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2014 தேர்தலில், முதன்முறையாக போட்டியிட்ட ராகுல் கசுவான் வரலாற்று சிறப்புடன் வெற்றியடைந்தார். அவரின் வெற்றி, 2019-இல் மேலும் கூடியது.
இந்நிலையில், நட்சத்திர உறுப்பினராக விளங்கும் ராகுல், ஆட்சியில் பா.ஜ.க இருக்கின்ற போதிலும், காங்கிரஸில் இணைந்து மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த தேர்தலில், ராஜஸ்தான் மக்கள் பா.ஜ.க.விற்கு சாதகமாக வாக்களித்திருப்பினும், பா.ஜ.க.வின் 85 நாள்கள் ஆட்சியில், மக்கள் அடைந்திருக்கும் ஏமாற்றம், மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதும் இதன் வழி உறுதியாகியிருக்கிறது.
இந்திய மாநிலங்களிலேயே பரந்த நிலப்பரப்பை உடைய ராஜஸ்தான், மக்கள் தொகையில் 7 ஆவது இடத்தில் உள்ளது. ஆகையால், ராஜஸ்தானை விட பரப்பளவில் சிறியதாக இருக்கும் மாநிலங்களை விட, குறைவான தொகுதிகளையே கொண்டுள்ளது.
அவ்வகையில், சட்டமன்றத்தில் 200 தொகுதிகளையும், மக்களவையில் 25 தொகுதிகளையும், மாநிலங்களவையில் 10 தொகுதிகளையும் மட்டுமே பெற்றுள்ளது ராஜஸ்தான்.
தொகுதிகளில் புறந்தள்ளப்பட்டது போல, தாய் மொழியையும் பறிகொடுத்துள்ளனர் ராஜஸ்தான் மக்கள். ராஜஸ்தானில், 2011 கணக்கெடுப்பின் படி, அதிகப்படியாக சுமார் 36.88% பேர், ராஜஸ்தானியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அடுத்தபடியாக, இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் 27.34% பேராக இருக்கின்றனர்.
எனினும், ராஜஸ்தானி புறந்தள்ளப்பட்டு, இந்தியே அம்மாநிலத்தின் ஆட்சி மொழியாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி மற்றும் உருது மொழிகள் இருக்கின்றன.
இவ்வாறு, மண்ணை செழிக்க வைக்கும் விவசாயிகள் மீதான வெறுப்பும், மொழித்திணிப்பும் பா.ஜ.க.வின் முதன்மை அரசியல் கருத்துகளாக இருக்கிற நிலையில், அதற்கான தக்க பதிலடியை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் வழி தரவும் உறுதிபூண்டுள்ளனர் ராஜஸ்தான் மக்கள்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆட்சியில் இருந்த அமைச்சரே படுதோல்வியடையும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறியிருக்கிறது.
மக்கள் விழப்படைய தொடங்கி பா.ஜ.க-வை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டனர் என்பதற்கான அறிகுறியாகவும் அந்த தோல்வி அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!