Politics
வலுவடையும் இந்தியா கூட்டணி... சிதறும் பாஜக கூட்டணி : நாடு முழுவதும் மோடிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு !
இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகால மக்கள் விரோத மற்றும் பாசிச பாஜக ஆட்சியை முடிவு கட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் பாஜக அச்சத்தில் உள்ளது. இதற்கு காரணம் பாஜகவை காட்டிலும் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்குவங்கம், கர்நாடகா, பஞ்சாப், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. தோல்வி அச்சத்தால்தான் ஒன்றிய பாஜக அரசு ED உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. இருந்தும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் துணிச்சலுடன் பாஜகவின் சதித்திட்டங்களை முறியடித்து வருகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளை கண்டு அச்சமடைந்த பாஜக, இந்தியா கூட்டணி தேர்தலுக்கு முன்பே சிதறிவிடும் என்றும், அதன் தலைவர்கள் பிரிந்துவிடுவர் என்றும் தொடர்ந்து கூறிவந்தனர். மேலும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மூலம், எதிர்கட்சி தலைவர்களை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஆனால், தடைகளை தாண்டி இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
அதே நேரம் பாஜக கூட்டணியை இறுதிசெய்யமுடியாமல் திணறி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், ஒரிசா என நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கூட்டணியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு தொகுதி பங்கீடு நடைபெறாமல் இருந்து வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வலிமை பெற்றுவரும் நிலையில், பாஜக கூட்டணி சிதறி வருகிறது என்பது தெரியவருகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!