Politics

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையர் ராஜினாமா : எழுந்த புதிய சர்ச்சை... விவரம் என்ன ?

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவில்ல நிலையில், மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

தன்னாட்சி அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறது. மேலும், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளையும் தங்கள் சார்பு அமைப்புகளாக மாற்றிவருகிறது.

கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் சேர்ந்த ஷிண்டே, அஜித் பவாருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சொந்தம் என்று கூறியபோதே தேர்தல் ஆணையத்தின் மீது சர்ச்சை எழுந்தது. மேலும், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் சாயம் வெளுத்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வரும் 2027-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரின் ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் அங்கீகரித்துள்ளார்.

அடுத்த வாரம் மக்களைவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் முடிவை ஏற்க மறுத்ததால் அவர் ராஜினாமா செய்தாரா ? அல்லது அவர் ராஜினாமா செய்யும்படி ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: "மகளிருக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" - ப.சிதம்பரம் புகழாரம் !