Politics
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் : சமையல் எரிவாயு விலையை குறைத்த ஒன்றிய அரசு... பொதுமக்கள் கண்டனம் !
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
அதோடு தினசரி சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுக்கு மானியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாவும், அதனால் பொதுமக்களின் வாங்கிக்கணக்குக்கே மானிய தொகையை செலுத்துவதாகவும் மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்து அதனை செயல்படுத்தியது.
தொடக்கத்தில் சில மாதங்கள் இந்த மானிய தொகை சரியாக பொதுமக்களை வந்தடைந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக மானியதொகையை மோடி அரசு குறைத்தது. ஆனால், சமையல் எரிவாயு விலை பலமடங்கு அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவ்வப்போது தேர்தல் வரும் சமயங்களில் மட்டும் ஓட்டுக்காக சமையல் எரிவாயு விலையை ஒன்றிய பாஜக அரசு குறைத்து வந்தது. அதே போல தேர்தல் முடிந்ததும் மீண்டும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பதும் தொடர்ந்து வந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்டது.
அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு சமையல் எரிவாயு விலையை ரூ.100 குறைத்து ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில் மகளிர் தினத்தை சமையல் எரிவாயு விலை முன்னிட்டு ரூ.100 குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் வந்தால் மட்டுமே இதுபோல விலையை குறைத்து, தேர்தல் முடிந்ததும் விலையை அதிகரிக்கும் ஒன்றிய பாஜக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!