Politics
“மணிப்பூர், ஹத்ராஸ் சம்பவங்களின்போது எங்க இருந்தீங்க?” - மம்தா பானர்ஜி மோடிக்கு அடுக்கடுக்கான கேள்வி !
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மேற்கு வங்க மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும், மேற்கு வங்க மாநிலம் பாவம் செய்வதாகவும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி நடைபயணம் மேற்கொள்வார். அந்த வகையில் இன்று அம்மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்க பெண்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர் என்றார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “நேற்று பிரதமர் மோடி இங்கு (மேற்கு வங்கம்) வந்து பேசினார். அப்போது இங்கே பெண்கள் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். மோடி அவர்களே, பெண்கள் இங்கே மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். பலரும் பலவித தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். ED, CBI உள்ளிட்டவையை மாநில ஆளுங்கட்சியினர் மீது ஏவி, தேர்தலில் பாஜக வெற்றி பெற பார்க்கிறது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் பெண்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மேற்கு வங்கம் மீது உங்களுக்கு என்ன கோபம்? உங்களால் வெற்றி பெற முடியுமானால், எதற்கு எதிர்க்கட்சிகள் மீது வீண் பழி போடுகிறீர்கள்? பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் மோடி, மணிப்பூரில் பெண்கள் ஆடைகளின்றி நடு ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டபோதும், ஹத்ராஸில் பெண் ஒருவர் கூட்டுப்பாலியால் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்டபோதும் நீங்கள் எங்கு இருந்தார்?
பில்கிஸ் பானு வழக்கு எல்லாம் மறந்துவிட்டீர்களா? நீங்கள் (மோடி) இங்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறீர்கள், அங்கே உங்கள் (பாஜக) எம்.பி மல்யுத்த பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவரையும் நீங்கள் தலைவராக நியமிக்கிறீர்கள். வெட்கமாக இல்லையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளோடு பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!