Politics
நிரவ் மோடி முதல் பிரக்யா சிங் தாகூர் வரை... “இதுதான் மோடியின் அசல் குடும்பம்” - போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மோடி கா பரிவார்' (மோடியின் குடும்பம்) என்று பாஜகவினர், ஆதரவாளர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் மோடி கூட, குடும்பத்தை காண வந்தேன் என்று வழக்கம்போல் வாயாலே வடை சுட்டார். மோடியின் வருகையை முன்னிட்டு திமுகவினர் மக்களுக்கு ஓட்டை வடை கொடுத்து நூதன பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் ‘இதுதான் மோடியின் குடும்பம்’ என்று கொலையாளிகள், கொள்ளையர்கள், ஊழல் & பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை காங்கிரஸ் கட்சியினர் டெல்லி முழுவதும் ஒட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பாஜக எம்.பி-கள், ஒன்றிய அமைச்சர்களும் அடங்குவர்.
அந்த போஸ்டரில்,
* உலக பணக்காரர்களின் ஒருவரான, பல வகையான ஊழல் வழக்கில் தொடர்புடைய அதானி (Adani),
* ஊழல் குற்றவாளி நிரவ் மோடி (Nirav Modi),
* ஊழல் குற்றவாளி மெஹுல் சோக்சி (Mehul Choksi),
* மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றத்தில் தொடர்புடைய பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிங் (Brij Bhushan),
* உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குல்தீப் செங்கர் (Kuldeep Sengar),
* உ.பி லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு விவசாயியை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பாஜக உ.பி அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா (Ajay Kumar Mishra),
* கொலை, வெடிகுண்டு உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடைய பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் (Pragya Singh Thakur)
* பணத்தை ஏமாற்றி வெளிநாடு சென்று ஒய்யாரமாக வாழ்ந்து வரும் பாஜக முன்னாள் எம்.பி விஜய் மல்லயா (Vijay Mallya)
* ஊழல் குற்றவாளி லலித் மோடி (Lalit Modi)
* பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடைய பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத் (Upendra Singh Rawat)
* ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் (Anurag Thakur)
- உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டில் தொடர்புடைய பலரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!