Politics

மறைமுக கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை காப்பாற்றுகிற, பா.ஜ.க.வின் CBI விசாரணைக்குழு!

தமிழ்நாட்டின், கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில், மிகவும் ஆபத்து நிறைந்த வழக்காக குட்கா ஊழல் வழக்கு கருதப்படுகிறது.

சிறுவர்கள் எதிர்காலம் போதைக்கு அடிமையாகும் என்ற அச்சத்தை ஊட்டுகிற செயலாகவும் இவ்வழக்கு எண்ணப்படுகிறது. இந்த வழக்கின் வெளிப்படை தன்மையென்பது, ஒட்டு மொத்த தமிழ்நாட்டினரும் அறிந்த நிலையில் உள்ளது.

இந்த சூழலில், மக்கள் அறிந்த ஒரு செய்தியை, சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என 6 ஆண்டுகளாக தட்டிக்கழித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கீழ் இயங்கும் CBI விசாரணை அமைப்பு.

2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில், மாநில காவல்துறையின் குட்கா வழக்கு விசாரணை போதுமானதாய் இல்லை என அவ்வழக்கை CBI-க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை அந்த ஆண்டே, உச்ச நீதிமன்றமும் வழி மொழிந்தது.

எனினும், விசாரணை வலுபெறாமலேயே இருந்து வந்தது. அதன் பின், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு, குட்கா வழக்கை தீவிரப்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்தது.

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பதிவியை மறந்து, பா.ஜ.க.வின் தொடண்டராக செயல்படும் காரணத்தால், அவ்வழக்கு விசாரணையை நீட்டிக்க ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் போட்டார்.

இதனையடுத்து, தி.மு.க அரசு, இவ்வழக்கிற்கு தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதன் பிறகு வேறு வழியின்றி, ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். எனினும், பா.ஜ.க.வின் மற்றொரு விழுதான CBI விசாரணையிலும், அ.தி.மு.க.விற்கு சார்பான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா, “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பி. வி. ரமனா மீதான CBI விசாரணை அதிருப்தி அடைய செய்கிறது” என தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், விசாரணை மேற்கொள்ளும் CBI அதிகாரி, நீதிமன்றத்திற்கு நேரில் வந்து, வழக்கு தொடர்பான விளக்கங்களை அளிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: SBI-வங்கியா? அல்லது பா.ஜ.க-வின் கிளையா? : இச்செயலை முதலில் தண்டிக்கப்போவது நீதிமன்றமா? மக்கள் மன்றமா?