Politics

கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு முடிவுரை எழுதிவருகின்றது பாஜக - காங். மேலிட பொறுப்பாளர் விமர்சனம் !

சென்னை இராயப்பேட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை மற்றும் இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய தேசிய காங்கிரஸ் கமிட்டி தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், "கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு முடிவுரை எழுதிவருகின்றது பாஜக. பெட்ரோல் விலை 70 ரூபாயில் இருக்கும் போதும் சிலிண்டர் விலை ரூ 400 ல் இருக்கும் போதும், அதனை மோடி கண்டித்து போராடிக்கொண்டிருந்தார் தற்போது பெட்ரோல், பால்,சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது.

பத்து ஆண்டுகளில் பொறியாளர்களின் சம்பளம் அதே நிலையில் உள்ளது. ஆனால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது, வேலை வாய்ப்பில்லை எங்கும் நிலவுகிறது. விவசாய நலனுக்காக கொடுக்கப்படும் கடனால் 45,000 கோடி தனியார் இன்சுரன்ஸ் கம்பெனிகளே பயன்படுகின்றது, அதனால் விவசாயிகளுக்கு பயன் ஏதும் கிடைப்பதில்லை. ED, CBI போன்ற விசாரணை அமைப்புகள் பாஜக அலுவலகத்திற்கு தங்கள் அலுவலகத்தை மாற்றி விடலாம்.

துபாய் செல்ல முடிந்த மோடிக்கு மணிப்பூர் செல்ல முடியவில்லை ஏன்? காங்கிரஸ் ஜனநாயகத்தை நம்புகின்றது. சிஏஜி அறிக்கை ஏன் முறையாக வருவதில்லை? ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் படி மோடி செயல்படுகின்றார். பணமதிப்பிழப்பு காரணமாக 4கோடி மக்கள் 2000 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.

குண்டர்களின் தலைவராக தான் மோடி உள்ளார். அவரால் ஏழை மக்களுக்கு பணம் கொடுக்கமுடியவில்லை. ஆனால் திவால் ஆவதாக தொழிலதிபர்களுக்கு கோடிகணக்கில் பணத்தை வாரிக்கொடுக்கின்றார். உ.பி கோவில் திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் கோடீஸ்வரர்கள் தான்பங்கேற்றனர், பொதுமக்கள் பங்கேற்கவில்லை.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பு. அவரது தலைமையில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறும், இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரும். தமிழக மக்கள் சரியான அடியை RSS கொள்கைக்கு கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்தால் தலைவராக இருப்பீர்கள் இதுவே பாஜகவில் இருந்தால் ஒரு ஊழியராக தான் இருக்க முடியும்"என்று தெரிவித்தார்.

Also Read: வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பரவிய தவறான செய்தி : விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு !