Politics
"நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும், பாசிஸ்டுகளையும் வீழ்த்துவோம்" - அமைச்சர் உதயநிதி !
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் திமுக'வை சார்ந்த அனைத்து அணிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகுந்த எழுச்சியான மாநாட்டை சேலத்தில் நடத்தியுள்ளோம். மிகப்பெரிய மாநாட்டை நடத்த இளைஞர் அணிக்கு வாய்ப்பு தந்த கழகத்தின் தலைவர் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்த அமைச்சர் கே.என் நேரு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் அணியின் நிரந்தர செயலாளர் நம் தலைவர் அவர்கள்தான். இளைஞர் அணி மாநாட்டு நடத்துவதற்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட செயல்வீரர் கூட்டம் நடத்தப்பட்டது.
மாநாட்டிற்கான நிதியினை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வாரி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக மாநாடு தேதி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. மாநாட்டிற்கான சுடரோட்டத்தை சிறப்பாக வழி நடத்திய அனைத்து மாவட்ட செயலாளர்களும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கழகத்தின் சாதனைகள் மற்றும் ஒன்றிய அரசு செய்த துரோகங்கள் குறித்து தெருமுனை கூட்டத்தில் நாம் எடுத்துக் கூற வேண்டும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் அப்பொழுதுதான் மாநாடு உண்மையான வெற்றியை பெறும்.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு இந்திய ஒன்றியத்தை காப்பாற்றுவதற்கான மிக முக்கியாமன தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தல். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தலைவரின் கரங்களில் நாம் சமர்ப்பிப்போம். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் பாசிஸ்டுகளையும் வீழ்த்தி ஒட்டுமொத்த இந்தியாவிலும் விடியலை உருவாக்க வேண்டும். பாஸிஸ்டுகள் வீழட்டும். இந்தியா வெல்லட்டும்" என்று கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!