Politics
“ராமருக்கே துரோகம் செய்தவர் பிரதமர் மோடி” : பாஜக ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்திய ஐ.லியோனி !
கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொள்கை முழக்க தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அப்போது ஐ. லியோனி பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டை பிளவுபடுத்தி உள்ளது. அதனை சரி செய்ய தி.மு.க. இருக்கும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் மாநாடாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்திற்காக தான் இருக்கும். தமிழகத்தில் கோவில்களுக்கு செல்லும் பிரதமர் மக்களை சந்தித்து பேச நேரமில்லை. நாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் பிரதமர் மோடி, மக்களிடம் ராமர் கோவிலை அரைகுறையாக திறந்து வைத்து நாடகம் நடத்துகிறார்.
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நாட்டின் ஜனாதிபதியை பிரதமர் மோடியை அழைக்கவில்லை. கடவுள் ராமருக்கு துரோகம் செய்தவர் நரேந்திர மோடி. கருப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களின் அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்ன பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது. முந்தைய காலத்தில் சங்கம் வைத்து பல்வேறு அரசர்கள் தமிழை வளர்த்தார்கள்.
தற்போது பல்வேறு கூட்டங்கள் மற்றும் அமைப்புகள் வைத்து தமிழ் மொழியை தி.மு.க. வளர்த்து வருகிறது. காந்தி பெற்று தந்த சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், 2026 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். சில ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஆனால், பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது பாஜக அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும் ஆட்சியாக பாஜக உள்ளது.
பல்வேறு நெருக்கடிகளில் ஆரம்பித்த கட்சி தி.மு.க ஆகும். ஆரியம், திராவிடம் என்றால் என்ற கேள்விகளுக்கு கூட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதிலளிக்க திணறுகிறார். அ.தி.மு.க. கட்சி அவல நிலையில் உள்ளது. கூட்டணி கட்சிகளை மதிக்கும் இயக்கமாக திராவிட முன்னேற்ற கழகம் உள்ளது. இந்தியாவை பிளவு படுத்தி வரும் பா.ஜ.க அரசை மக்கள் தூக்கி எறிய முன் வந்து விட்டார்கள். தேசிய கொடியின் மூன்று நிறத்தை மாற்றி அவற்றை முழுமையாக காவி கொடியாக மாற்றும் முயற்சியில் பா.ஜ.க இறங்கி உள்ளது. இந்திய நாட்டின் பலமே மத ஒற்றுமையாகும்.
இதனை சிதைக்கும் எந்த கட்சியும் ஆட்சியில் அமர மக்கள் விட மாட்டார்கள். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பழுதடைந்த கோவில்களுக்கு நிதி ஒதுக்கி அரசு தி.மு.க. மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனை திசை திருப்பும் விதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை மூலம் பா.ஜ.க முடக்கி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!