Politics
அரசியலமைப்பின் முன்னுரையில் நீக்கப்பட்ட மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் : ஒன்றிய பாஜக அரசு அடாவடி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் உச்சமாக இந்துத்துவ மத வெறியர்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு அதனை மதசார்பற்ற நாட்டின் பிரதமர் ஒருவரே திறந்துவைத்து அவலமும் நடைபெற்றது. மேலும், அந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்களும் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படத்தில், `மதச்சார்பற்ற (Secular), சோசலிஸ்ட் (Socialist)' என்ற வார்த்தைகளை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. ஒன்றிய அரசின் வலைத்தளமான MyGovIndia-வில் பதிவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படத்தில், `மதச்சார்பற்ற (Secular), சோசலிஸ்ட் (Socialist)' என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக,புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடந்தபோது, நாடாளுமன்ற எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு பிரதியின் முன்னுரை பக்கத்திலும், மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகளை ஒன்றிய பாஜக அரசு நீக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!