Politics
மீண்டும் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட நீட் கட் ஆப் மதிப்பெண் : இதுதான் பாஜகவினர் சொல்லும் தகுதியா?
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. இதன் மூலம் நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்காக கொண்டுவரப்பட்டது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் காரணமாக நாட்டின் பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியாது எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாக வெளியான இந்த அறிவிப்பை பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை தேசிய மருத்துவ ஆணையம் பூஜ்ஜியமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், குறைவானவர்களே அதில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் தனியார் கல்லூரிகளில் தற்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் விதமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் கல்லூரிகளில் கட்டணமாக ரூ. 2.5 கோடி முதல் 2.5 கோடி வரை வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!