Politics
"யாரும் எங்களை அச்சுறுத்தவில்லை" -ஆளுநரின் பொய் குற்றசாட்டை அம்பலப்படுத்திய கோவில் அர்ச்சகர்கள் !
சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு கடந்த அக்டோபர் 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்றும் போலியான குற்றச்சாட்டை மாறி மாறி ஆளுநர் மாளிகை முன்வைத்து வருகிறது. மேலும் குற்றவாளி மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போலியான குற்றசாட்டை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.
ஆனால், உரிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ஆளுநரின் பொய் குற்றச்சாட்டை தமிழ்நாடு போலிஸார் அம்பலப்படுத்தினர். இந்த நிலையில், கோவிலை வைத்து தமிழ்நாடு அரசை விமர்சிக்க முயன்ற ஆளுநரின் பொய் குற்றச்சாட்டை கோவில் அர்ச்சகர்களே போட்டு உடைத்துள்ளனர்.
இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், நேற்றில் இருந்தே தமிழ்நாடு அரசு மீது பாஜக தலைவர்கள் ஆதாரமில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்களுக்கே கடும் போட்டி அளிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில், இன்று காலை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவிலுக்குச் சென்று, பிரார்த்தனை செய்தேன்.இந்த கோவில் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
இங்கு பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குத் தெரியாத பயம் மற்றும் பயத்தின் உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பண்டிகை சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டது.ராமர் கோவில் பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, இங்குள்ள கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது"என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடத்துறையினர் சம்மந்தப்பட்ட கோவிலுக்கு சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஆளுநரின் கருத்து குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கோதண்டராமர் திருக்கோவில் பட்டாசரியர் மோகன், இன்று காலை 8 மணி அளவில் ஆளுநர் ரவி திருக்கோவிலுக்கு வந்து திருக்கோயிலின் கோபுர வாசல் முன் அவருக்கு தேவஸ்தானம் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.இன்று அபிஷேகம் தினம் என்பதால் சாமிக்கு சிறப்பான பூஜை செய்ய வேண்டும் என்பதால் இரவு முழுமையாக தூங்கவில்லை.. அதனை பார்த்து முகத்தில் களைப்பு இருப்பதாக ஆளுநர் தெரிவித்து இருக்கலாம். யாரும் எங்களை ஒன்றும் அச்ச படுத்தவில்லை.ஆளுநரின் பாதுகாப்பு படி தான் நாங்கள் நடந்துக் கொண்டோம்"என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஆளுநர் பொய் கருத்தை பரப்ப முயன்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!