Politics
ராகுல் காந்திக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்த போலீசார் : தொடரும் பாஜக அரசின் அராஜகம் !
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தைக் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார். இந்த யாத்திரை காங்கிரஸ்க்கு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி. மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. மணிப்பூர், நாகாலாந்தில் யாத்திரை முடிந்ததை அடுத்துக் கடந்த ஜன.18ம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாமிற்கு வந்தது.
அங்கு ராகுல் காந்தியின் யாத்திரையின் போது அங்கு வந்து பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக கோஷமெழுப்பினர். ஆனால், அவர்களை கண்டதும் ராகுல் காந்தி பேருந்தில் இருந்து இறங்கி அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார். மேலும் தன்னை எதிர்த்து கோஷமிட்ட போராட்டக்காரர்களை நோக்கி அவர் பறக்கும் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு அசாம் கோவிலின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் இன்று காலை ராகுல் காந்தி ஶ்ரீ சங்கர தேவ் கோயிலுக்கு சென்றார். ஆனால், கோவிலின் முன்பு நின்ற பொலிஸார் கோவிலுக்குள் விடாமல் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தினர். ராமர் கோவில் திறப்பு விழா இருப்பதால் மதியம் வரை ராகுல் காந்தி கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நேற்று ராகுல் காந்தி கோவிலுக்கு செல்வதற்கு அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!