Politics

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - பாஜக முதல்வர் சர்ச்சை பதிவு - குவியும் கண்டனம் !

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தீண்டாமை, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பலவை அரங்கேறி வருகிறது. இந்தியா முன்னோக்கி செல்கிறது என்று பாஜக அரசு வெளியே சொல்லிக்கொண்டாலும், அவரவர் வீடுகளிலும், ஆளும் மாநிலங்களிலும் பின்னோக்கியே செல்கிறது. படிப்பறிவு, மருத்துவ வசதி என பல விஷயங்களில் விட இந்தியாவில் பல மாநிலங்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.

இதனிடையே ஒன்றியத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மதம், சாதி உள்ளிட்டவையை தூண்டிவிட்டு மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்கி வருகிறது. குஜராத் கலவரம் முதல் மணிப்பூர் வன்முறை வரை பாஜகவின் பின்புலமே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. மேலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மோடி, ஹிமந்த பிஸ்வா ஷர்மா

சிஏஏ உள்ளிட்ட பல சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசு, சாதிய ரீதியான பிளவையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு இந்த சூழலில் தற்போது அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சில மணி நேரத்திலேயே அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.

இதுகுறித்து நேற்று (26.12.2023) அவர் வெளியிட்டுள்ள X வலைதள பதிவில், "பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் கடமை" என்று பகவத் கீதை வாயிலாக கிருஷ்ணர் கூறுவது போல் வீடியோவும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்தது. மேலும் சிபிஐ(எம்), "பாஜகவின் மனுவாதி சித்தாந்தம் புறப்படுகிறது" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், தனது பதிவை நீக்கினார். எனினும், அவர் வெளியிட்டுள்ள பதிவின் ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Also Read: மக்களின் வரிப்பணத்தை முற்றிலும் வீணடிக்கும் ஒன்றிய அரசு: மோடி Selfie Pointக்கு ரூ.1.62 கோடி செலவு!