Politics
தமிழ்நாட்டை கைவிட்ட ஒன்றிய அரசு: வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்த நிர்மலா சீதாராமன்!
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திலேயே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் கன மழை செய்தது. 100 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. உடனே மக்களை மீட்க அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டடார். துரித நடவடிக்கையால் அதிகம் பாதித்ததால் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேபோல் தென்மாவட்டங்களும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தமிழ்நாடு அரசுதான் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு வழங்கிய ரூ.450 கோடி நிதி SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. என இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடமே நேரில் சந்தித்த போது வலியுறுத்தினார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஒருபோதும் தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது" என அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய பா.ஜ.க அரசு கைவிட்டது தெளிவாக தெரிகிறது. மேலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டு தற்போது உண்மையாகியுள்ளது.
இதற்கிடையில், வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடும் பேரிடராக அறிவித்து ஒன்றிய அரசின் NDRFல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிதியளிக்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாட்டு மக்கள் #OurTax_OurRights ஹேஷ்டேக்கில் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !