Politics

”அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா” : உ.பியில் புது ரீல் விட்ட பிரதமர் மோடி!

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளர். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்துபெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சமூக அநீதிகளும், மத வெறியாட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இப்படி வேறு எந்த மாநிலங்களிலும் மக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறுவது இல்லை என புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு பிரதமர் மோடி அடிமை மனப்பான்மையிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உலகில் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மகாமந்திரையை பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போதுதான், “இந்தியா அடிமை மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற்றுவிட்டது,” என்று கூறி இருக்கிறார். இதில் நகைப்புக்குறியது என்னவென்றால் அடிமை மனப்பான்மையில் மக்களை மாற்றி வைத்திருப்பதே உ.பியை ஆளும் பா.ஜ.க அரசு தான் என்றும் அவர் பேசியதுதான்.

ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், மனித உரிமை மீறல்களும், மதவெறி பிரச்சாரமும், அரசை விமர்சிக்கும் பொது மக்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் அமர்ந்து மோடியால் எப்படி இப்படி பேச முடிந்தது என்றும்? மோடியின் பேச்சு சாத்தன் வேதம் ஓதுவது போல் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தை விவாதிக்க மறுக்கும் ஊடகங்கள் - ஆனால் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!