Politics
மக்களை ஒட்டுகேட்பதற்கு ஒரு மசோதாவா? - ஊடக சுதந்திரத்தை பறிக்கும் மசோதாவை தாக்கல் செய்த ஒன்றிய அரசு !
ஒரு மனிதனின் மிக முக்கியமான உரிமைகளில் ஒன்று பேச்சுரிமை. அதனையே தடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தடுக்க துணிந்து இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், அத்துமீறி அவைக்குள் குதித்து கலர் புகை வீசியவர்களுக்கு அனுமதி கடிதம் அளித்த பா.ஜ.க எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்திய சுமார் 122 எதிர்க்கட்சிகளை சஸ்பண்ட் செய்து தாங்கள் ஏதேச்சதிகாரத்தின் உச்சம் என பா.ஜ.க அரசு வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் தான் கடந்த 138 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஆங்கிலேயர்களின் தொலைத் தொடர்பு சட்டத்தின், சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்நவ்.தொலைத் தொடர்புத் துறையில், ஊடகங்கள் வெளியீடும் செய்திகள், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்துவதாக இருப்பின், ஒன்றிய அரசு அக் குறிபிட்ட ஊடகத்தை முடக்கலாம் என்ற ஷரத்தையும் இணைத்திருக்கிறது.
இது முழுக்க முழுக்க ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நபர்களுக்கு இடையே பகிரப்படும் செய்திகளை தேவைப்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனம் அரசுக்கு வழங்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேசிய பாதுகாப்பு; சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது மற்றும் பொதுக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசால் கண்காணிக்கப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும்.
என்றும் உளவுபார்க்கும் கருவிகளே இல்லாமல் இந்த சட்டத்தின் துணைக்கொண்டு ஒன்றிய அரசால் ஒருவரை ஒட்டுக்கேட்க முடியும். இதற்கு மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்று கூறப்பட்டாலும், தொலைத்தொடர்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதன் முழுமையான கட்டுப்பாடு ஒன்றிய அரசுக்கு செல்கிறது
- தொலைத் தொடர்பு ஊடகங்களின் உரிமங்கள் தொடர்பான புது வரையறையும், இம்மசோதா முன்மொழிகிறது. இதன் மூலம், தொலைத் தொடர்பு சேவைகள், கருவிகள், உள்கட்டமைப்பு, வலைபின்னல் போன்ற அனைத்தும் ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. இதன் மூலம் கருத்துரிமை முழுவதுமாக துண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நடக்ககூடிய செய்திகளை, பல்வேறு பகுதியிலிருந்தும், பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் சேகரித்து உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்தை கட்டுப்படுத்த நினைப்பது நாட்டின் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடிக்க பார்க்கிறார்கள் என்ற முதுமொழிக்கேற்ப இந்த மசோதா மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குறியாக்க பார்க்கிறது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!