Politics
தெலங்கானாவில் முதல் முறையாக ஆட்சியமைக்கும் காங்கிரஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி!
கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது.
90 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 199 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும், மிசோரத்தில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இதில் சத்தீஸ்கரில் 2 கட்டமாக நடைபெற்றது. ஐந்து மாநிலங்களிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்ற நிலையில், மிசோரத்தில் 77.04 சதவிகிதம், சத்தீஸ்கரில் 76.31 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 76.22 சதவிகிதம், ராஜஸ்தானில் 73.92 சதவிகிதம், தெலுங்கானாவில் 70.60 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகின.
இந்த சூழலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. தெலங்கானா மாநில, அம்மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தின் எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அனுமுலா ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து கோமதி ரெட்டி, சீதக்கா, பொன்னம் பிரபாகர், வெங்கட் ரெட்டி, கொண்டா சுரேகா, உத்தம் குமார் ரெட்டி, ஷ்ரீதர் பாபு, கிருஷ்ணா பொங்குலேட்டி, ஜூபாலி, தும்மல நாகேஷ்வர் ராவ் ஆகிய 10 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
தெலங்கானாவில் முன்னதாக ஆட்சி செய்த பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை தோல்வியடைய செய்து, 92,35,792 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவுடன் காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்டு ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மாநில தேர்தலில் பாஜக வெறும் 32,57,511 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!