Politics
பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்க முயற்சியா ? - சபாநாயகருக்கு கடிதம் எழுதிய டேனிஷ் அலி MP !
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி எம்.பியை பார்த்து அவரது மத்தை சொல்லி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினார்.
நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதனைத் தொடர்ந்து டேனிஷ் அலி மீது நடவடிக்கை எடுங்கள்' என பா.ஜ.க எம்.பி-க்கள் சிலர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினர். இதன் காரணமாக இந்த விவகாரம் தொடர்பாக நேரில் வந்து விளக்கமளிக்குமாறு ரமேஷ் பிதுரிக்கும், டேனிஷ் அலிக்கும் மக்களவை சிறப்புரிமைக் குழுவின் செயலகத்திலிருந்து கடந்த நவம்பர் 21-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த கடிதம் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்க முயற்சிக்கும் வகையில் இருப்பதாக டேனிஷ் அலி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் , சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடித்ததை இணைத்து அதில், "சிறப்புரிமைக் குழுவிடமிருந்து நான் பெற்ற கடிதமானது, டிசம்பர் 7-ம் தேதி நேரில் ஆஜராகி என்னை வாய்மொழி ஆதாரம் அளிக்குமாறு கூறுகிறது.இது பாதிக்கப்பட்டவரையே, குற்றவாளியாக்குவதற்கான திசைதிருப்பும் முயற்சி.
ரமேஷ் பிதுரிக்கு எதிராகச் சிறப்புரிமைக் குழு செயல்படத் தவறினால் அது நீதியின்மீதான நம்பிக்கையை கேலிக்கூத்தாகிவிடும்.அவையில், என்மீது ரமேஷ் பிதுரி தொடுத்த தாக்குதலை இந்த நாடே பார்த்தது. எனவே அந்தக் காணொளியை நீங்கள் பெற்று, அதனைச் சிறப்புரிமைக் குழு உறுப்பினர்களிடையே காண்பித்து, உண்மையான குற்றவாளியை அடையாளம் காண உதவ வேண்டும். சபையின் பதிவேடுகளை உன்னிப்பாகப் பார்த்து, உண்மைகளின் அடிப்படையில் விரைவான முடிவை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !