Politics
பாஜக வென்றால் மக்களை நேராக சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும் - ப.சிதம்பரம் கிண்டல் !
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் அங்கு காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரம் அங்கு பாஜக சொற்ப இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தோல்வி பயத்தில் பாஜக வழக்கம் போல விசாரணை அமைப்புகளை ஏவி விட்டுள்ளது. சுமார் 4 காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளில் ஒன்றிய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த செயலை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், " தெலங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் விசாரணை அமைப்புகள் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். இதில் ஒருவர் கடந்த 1ம் தேதிபாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்தார். அதே நேரம் எனக்கு தெரிந்து பாஜகவின் எந்த வேட்பாளரும் விசாரணை அமைப்புகளால் தேடப்படவில்லை.
ஏனெனில் அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில், பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டால், அக்கட்சி தெலங்கானா மக்களை நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.ஒன்றிய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எந்த வாதமும் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!