Politics
மீண்டும் மீண்டும்... பாஜகவில் இருந்து அதிரடியாக விலகிய விஜயசாந்தி... தொடர் பின்னடைவில் பாஜக !
இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் விஜயசாந்தி. 1980-ல் கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார். 1992-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'மன்னன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த விஜயசாந்தி, தொடர்ச்யாக படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.
நடிப்பில் இருந்து அரசியலுக்கு செல்ல விரும்பிய இவர், 1998-ம் ஆண்டு தெலங்கானா பாஜகவில் இணைந்தார். 2005 வரை அக்கட்சியில் இருந்த அவர், பின்னர் அதில் இருந்து விலகி 2009-ல் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்தார். அந்த கட்சியிலிலும் 2014 வரை இருந்த இவர், 2014-ல் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 2020-ல் விலகி மீண்டும் பாஜகவிலேயே இணைந்தார். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் அரசியல் என இரண்டையும் விடாமல் தொடர்ந்து வந்த இவர், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்தபோது எம்.பி-யாகவும் பதவி வகித்தார். எனினும் நேற்று வரை பாஜகவில் செயல்பட்டு வந்த இவர், தற்போது அக்கட்சியில் இருந்து விலகியுள்ளர்.
அண்மைக்காலமாக பாஜகவின் நடவடிக்கை பிடிக்காமல் நாடு முழுவதும் இருந்து பலரும் பாஜகவில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, தன்னிடம் பண மோசடி செய்த நபருக்கு பாஜகவினர் உதவியாக இருப்பதாக கூறி, நடிகை கெளதமி அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், தற்போது நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலங்கனா முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த், எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர். இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர்.
அந்த வகையில், மீண்டும் விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் அவர் காங்கிரஸில் இணைவது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!