Politics
“மின்சாரத்தை திருடி வீடு அலங்கரிப்பு...” : சர்ச்சையில் சிக்கிய முன்னாள் முதல்வர் - அதிகாரிகள் விசாரணை !
கர்நாடக முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் தான் HD குமாரசாமி. இவர் தற்போது பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையையொட்டி, அவரது வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மின் விளக்குகளுக்கு அவர், மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை திருடியதாக பகிரங்க குற்றச்சாட்டு அண்மையில் எழுந்தது.
அதோடு மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை கர்நாடக காங்கிரஸ் தனது X தளத்தில் பதிவிட்டு, உலகின் ஒரே உத்தமர் குமாரசாமியின் ஜே.பி.நகர் இல்லத்தில் சட்ட விரோதமாக மின்கம்பத்தில் இருந்து நேரடியாக தீபாவளி விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது. மின்சார திருட்டுக்கு முன்னாள் முதல்வர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது அரசாங்கம் (காங்கிரஸ்) தற்போது மக்களுக்கு 2000 யூனிட்கள் அல்ல, 200 யூனிட்கள் தான் இலவசமாக வழங்குகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி "கர்நாடகம் இருளில் மூழ்கிவிட்டது" என்று சொல்லிவிட்டு இப்போது திருட்டு மின்சாரத்தில் உங்கள் (குமாரசாமி) வீட்டில் கொளுத்தி விட்டீர்கள் அல்லவா? உங்கள் வீடு இப்படி ஜொலிக்கும்போது, கர்நாடகம் இருட்டில் இருக்கிறது என்று ஏன் சொல்கிறீர்கள்?! மின்சாரத்தை விடாமல் இன்னும் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும்?" என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தது.
குமாரசாமியின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரது வீடு அருகே, மின்சாரம் திருட்டு குறித்து போஸ்டர்கள் ஒட்டியும் மக்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகாரையடுத்து, பெங்களூரு மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த குற்றச்சாட்டை உண்மையென ஒப்புக்கொண்டுள்ளார் குமாரசாமி. மேலும் தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும், இது தனது வீட்டுக்கு அலங்கரித்த ஊழியர்கள் செய்த தவறு என்றும், அரசு சொத்தை அபகரிக்கும் எண்ணமில்லை என்றும், மின்வாரிய அதிகாரிகள் அபராதம் விதித்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதோடு இதனை காங்கிரஸ் கட்சி பூதாகரமாக மாற்ற நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதனை வைத்த்து தன்னை அடக்க நினைப்பதாகவும் விமர்சித்துள்ளார். எனினும் மின் கம்பத்தில் இருந்து தீபாவளி அன்று, மின்சாரம் திருடி, தனது வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்த குமாரசாமியின் செயலுக்கு அம்மாநிலம் முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !