Politics
“என்னையும் பேரம் பேசினார்கள்... ஆனால்...” - ம.பி முன்னாள் முதல்வர் கமல்நாத் பேச்சு !
தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் மற்றும் சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அரசியல் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நர்மதாபுரம் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் பேசியதாவது, "2020-ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது என்னிடம் பேரம் பேசப்பட்டது. எம்.எல்.ஏ-க்கள் என்னிடம் கோடிக்கணக்காக பேரம் பேசினர். நான் நினைத்தால் ஒப்பந்தம் செய்திருக்க முடியும். ஆனால் நான் யாருடனும் ஒப்பந்தம் போடமாட்டேன் என்று கூறினேன். நாற்காலி (முதலமைச்சர் பதவி) போனால் போகட்டும் என்று தைரியமாக சொன்னேன்" என்றார்.
230 தொகுதியை கொண்ட மத்திய பிரதேசத்தில் 2018-ல் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் பெற்று கூட்டணி கட்சிகளின் ஆத்ரவுகளோடு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அப்போது கமல் நாத் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால் 2020 ஆம் ஆண்டில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-கள் அக்கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்ததால் ஆட்சி கலைக்கப்பட்டு, பெரும்பாண்மை பெற்று சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !