Politics
“மோடி லட்சம் மதிப்புள்ள ஆடையை அணிகிறார்.. நானோ ஒரு வெள்ளைச் சட்டையை மட்டுமே அணிகிறேன்..” -ராகுல் கிண்டல்!
தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சியினரும் பிரசார பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தான் ஓபிசி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மதிப்புடைய ஆடைகளை அணிவதாக மோடி குறித்து குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து இன்று ம.பியில் உள்ள சத்னா தொகுதியில் நடந்த பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டேன். ஒவ்வொரு பேச்சிலும் தான் ஒரு OBC சமூகத்தைச் சேர்ந்தவன் என்று எல்லா இடங்களிலும் சொன்னார். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிதான் பிரதமரானார். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1-2 லட்சம் மதிப்புடைய ஆடைகளை அணிகிறார்.
அவர் ஏற்கனவே அணிந்த ஆடைகளை நீங்கள் மற்றொரு முறை திரும்ப பார்த்திருப்பீர்களா? ஆனால் நான் இந்த ஒற்றை வெள்ளைச் சட்டையை மட்டுமே அணிந்திருக்கிறேன். இப்போது நாங்கள் சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பற்றி பேச ஆரம்பித்ததும் அவரது பேச்சில் இருந்து சாதி மறைந்து விட்டது. ஏன் தெரியுமா? இதைப்பற்றி நாங்கள் பேச தொடங்கியதும், இந்தியாவில் சாதி இல்லை என்று மோடி பேச தொடங்கிவிட்டார்.
ம.பி-யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், முதல் வேலையாக மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறாத வரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்களிக்க முடியாது.
சில நாட்களுக்கு முன் சத்தீஸ்கரில் பிரச்சாரத்தின் போது சில விவசாயிகளை சந்தித்தேன். அவர்களின் நிலத்தின் விலையைக் கேட்டேன். 'எனது நிலத்தின் விலை எனக்குத் தெரியாது' என்று அந்த விவசாயி கூறியதை அறிந்து நான் வியப்படைந்தேன். அரசு ஏழை மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரியை பெற்று, பெரும் தொழிலதிபர்களிடம் பணம் முழுவதையும் ஒப்படைக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழைகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அவர்கள் தாக்கினர். ஜிஎஸ்டி என்பது வரி அல்ல. இது விவசாயிகள், சிறு வியாபாரிகள், வணிகர்கள் மீதான தாக்குதல். சிறு வியாபாரிகளை முடிக்க இது ஒரு ஆயுதம்.
ஓபிசி, ஆதிவாசி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப் பிரிவினரால் ஜிஎஸ்டி வழங்கப்படுகிறது. அரசு ஏழை மக்களிடம் இருந்து ஜிஎஸ்டியை எடுத்து வங்கிப் பணத்தை அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கிறது.” என்றார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?