Politics
“வாக்கு செலுத்தும் முன் இதை நினைவில் வையுங்கள்..” : வாக்குறுதியை பட்டியலிட்டு ராகுல் காந்தி பதிவு !
தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. தொடர்ந்து பிரசாரம் முடிந்து இன்று மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரிலும், 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமிலும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் சத்தீஸ்கரில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று முதற்கட்ட பதிவு தொடங்கியுள்ளது. இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் இதுவரை பல மக்களும் அந்தந்த வாக்குசாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் காலை 7 மணிக்கே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
" உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, மீண்டும் ஒருமுறை சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு நம்பகமான அரசாங்கம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் உத்தரவாதம்:
✅ விவசாயிகளின் கடன் தள்ளுபடி
✅ 20 குவிண்டால்/ஏக்கர் நெல் வாங்கப்பட்டது.
✅ நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000
✅ நெல் ரூ.3,200 MSP
✅ டெண்டு இலைகளுக்கு ரூ.6,000/பை
✅ டெண்டு பட்டா ரூ.4000/ஆண்டு போனஸ்
✅ 200 யூனிட் மின்சாரம் இலவசம்
✅ காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்
✅ KG முதல் PG வரை இலவசக் கல்வி
✅ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை
✅ 17.5 லட்சம் குடும்பங்களுக்கு வீடு
✅ சாதி கணக்கெடுப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
"1. மிசோரம் - நவம்பர் 07.
2. மத்திய பிரதேசம் - நவம்பர் 17
3. தெலங்கானா - நவம்பர் 30
4. ராஜஸ்தான் - நவம்பர் 23
5. சத்திஸ்கர் - முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 07 ம் தேதி ;
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17 ம் தேதி" நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?