Politics
இத்தனை பேரா ? முக்கிய பொறுப்பில் இருக்கும் ரவுடிகள் : தமிழ்நாடு பாஜகவின் ரவுடிகள் பட்டியல் இதோ !
பி.ஜே.பி., அகில இந்திய அளவிலே ரவுடிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது! தேடப்படும் கொலை-கொள்ளை குற்றவாளி களின் சரணாலயமாகி விட்டது. சிறைக்குச் சென்று சிறை உடை அணிய வேண்டியவர்கள் காவித்துண்டு போர்த்திக் கொண்டு, காவல் துறையின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு பி.ஜே.பி.யின் தலைவராக எல்.முருகன் இருந்தபோது வண்டலூரில் ரெட்ஹில்ஸ் சூர்யா மீது கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு பயன்படுத்தியது போன்று ஏறத்தாழ 50 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவன் தேடப்படும் குற்றவாளியாக இருந்தான்!
அவன் அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக விளங்கிய எல்.முருகன் முன் பாரதீய ஜனதா கட்சியில் இணைய, தானும் காவித்துண்டு தரித்து தனது கூட்டாளிகளுக்கும் காவி அணிவித்து வந்திருந்தான்!
தேடப்படும் ரவுடி, பா.ஜ.க. மேடையில் இருந்த தகவல் கிடைத்ததும் போலீஸ் படை அங்கு விரைந்ததும், அந்த ரவுடி சூர்யா காவித்துண்டோடு ஓட, அவன் கூட்டி வந்திருந்த, ரவுடிகளில் சிலர் கத்தியோடு போலீசில் அகப்பட்டுக் கொண்ட செய்திகள் ஏடுகளில் வந்தன.
இந்தச் செய்தி வருவதற்கு முன் பிரபல ரவுடிகள் கல்வெட்டு ரவி -சத்யராஜ் ஆகியோர் பி.ஜே.பி.யில் இணைந்த செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம் .இதுபோன்று தமிழ்நாட்டில் மட்டும் பி.ஜே.பி.யில் ரவுடிகள் இணைந்து பாதுகாப்புத் தேடுகிறார்களா என்று பார்த்தால், கர்நாடகாவிலும் அத்தகைய செய்தி வெளிவந்துள்ளது.
கர்நாடகப் போலீசால் தேடப்படும் ரவுடியான சுனில் என்பவன், ஒரு இரத்ததான முகாம் விழாவில் பி.ஜே.பி., எம்.பி.க்களான தேஜஸ்வி சூர்யா மற்றும் பி.சி.மோகன் இருவரோடு இணைந்து கலந்து கொண்டுள்ளான். மூவரும் காவி வண்ணத் துண்டை அணிந்து கொண்டு அந்த விழாவில் காட்சியளித்த புகைப்படம் ஏடுகளில் வெளிவந்துள்ளது. அந்த விழாவில் போலீசாரும் இருந்தனர். இந்த ரவுடி சுனிலை கொலை, பணம் பறித்தல் போன்று பன்னிரண்டு வழக்குகள் தொடர்பாகத் தேடி வருகின்றனர்.
பி.ஜே.பி. எம்.பி.க்களோடு அவனும் அவர்களைப் போலவே காவித்துணி அணிந்து விழாவில் பங்கேற்றதுடன், புகைப்படங்களுக்கு “போஸ்” கொடுத்துள்ளான். இதிலே வேடிக்கை என்ன வென்றால், இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஓரிரு தினங்களுக்கு முன் தலைமறைவாக இருந்த அவனை அவன் வீட்டிற்குள் நுழைந்து தேடி ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியுள்ளனர். அந்த தேடப்படும் பயங்கர கேடி. பி.ஜே.பி. முக்கியஸ்தர்களுடன் நிற்பதைக் கண்டும் போலீசார் அவனைக் கைது செய்ய முடியவில்லை.
பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கும் அவர்கள் உடன் இருந்த அந்த ரவுடிக்கும் சேர்த்து “சல்யூட்” அடித்தவாறு போலீஸ் நின்று கொண்டிருந்தது. "ரௌடி முன்னால் தலைகுனிந்து நின்றது போலிஸ்! எல்லா வாண்டட் (Wanted) ரவுடி களும் பி.ஜே.பி.யில் சேர்ந்து அதன் Wanted (வாண்ட்டட்) தலைவர்களாகின்றனர். வருங்காலத்தில் டான் தாவூத் இப்ராஹிம் கூட பி.ஜே.பி. யில் சேர்ந்து தன் மீதுள்ள வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் பி.ஜே.பி.யின் நடவடிக்கை குறித்து செய்யப் படும் கேலியும், கிண்டல்களும் வைரலாகி மொத்தத்தில் பி.ஜே.பி. என்பது பி.ஆர்.பி. யாக அதாவது, “பாரதிய ரவுடிகள் பார்ட்டி"யாக பெயர் மாற்றம் பெறு மளவு அந்தக் கட்சியில் கொலை-கொள்ளை குற்றவாளிகள் பெருகி வருகின்றனர்!
தற்போது அண்ணாமலை பி.ஜே.பி தலைவராக வந்ததும் அந்த கட்சியில் சேரும் ரவுடிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அது போதாது என்று அப்படி பி.ஜே.பி-யில் சேர்பவர்களுக்கும் கட்சியில் பதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதை பொதுமக்களுக்கு காட்டும் வகையின், தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள 834 வழக்குகளில் தொடர்புடைய 124 தமிழ்நாடு பாஜக கட்சியினைச் சார்ந்தவர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.
இதுதான் அந்த LINK: https://drive.google.com/file/d/1V9B-352X9YXwBHhB2tZhGPqNj0TpLL-N/edit
இந்த லிங்க்கை எல்லோரும் எல்லா இடத்திலும் பகிரவும்!
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!