Politics

ம.பி-யில் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் காங்கிரஸ் : பாஜகவின் நிலை என்ன ? வெளியான கருத்து கணிப்பு !

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளிவந்துள்ள கருத்து கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து ABP செய்தி நிறுவனம் மற்றும் C வோட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய தேர்தல் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 118 முதல் 130 இடங்கள் வரை வென்று பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் ஆளும் கட்சியான பாஜக 99 முதல் 111 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவுள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் உறுதியாக தெரிவிக்கின்றன.

Also Read: "இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன், ஆனால் இப்போது" -இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விரக்தி !