Politics

அதிகரிக்கும் செல்வாக்கு : ம.பி-யில் தனி மெஜாரிட்டியை நோக்கி காங்கிரஸ் - வெளியான கருத்துக்கணிப்பு !

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.ஆரம்பத்தில் அங்கு காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும் தொங்கு சட்டமன்றம் அமையவே வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், காங்கிரஸ் அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரம், ரூ,500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை, அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை அதிகப்படுத்தியுள்ளது.

அதன் காரணமாக, தற்போது வெளியான Political Critic கருத்து கணிப்பு முடிவுகளில், மத்திய பிரதேச சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சிக்கு 125 முதல் 135 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல ஆளும் பாஜகவுக்கு 90 முதல் 100 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Knowledgeable Crowd : "சென்னை ரசிகர்கள் அற்புதமானவர்கள்" - புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர் !