Politics
ஆபரேஷன் தாமரை : பாஜகவின் வலையில் எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும் சிக்கமாட்டார்கள் - சித்தராமையா உறுதி !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.
அங்கு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும் பாஜக கொண்டுவந்த ஏராளமான மக்கள் விரோத சட்டங்களையும், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களையும் ரத்து செய்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதனிடையே பிற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அதன்மூலம் ஆட்சியமைக்கும் பாஜகவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கர்நாடாவில் செயல்படுத்த முயற்சித்து வருவதாக பேசப்பட்டது. சில பாஜக தலைவர்களும் மறைமுகமான இதுகுறித்து பேசிவந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்த முயல்வதாக நானும் கேள்வி பட்டேன். ஆனால், அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. பாஜகவின் இந்த வலையில் எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும் சிக்கமாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !