Politics
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசாமல் இருக்க பேரம் பேசினார்கள்: மஹுவா மொய்த்ரா பரபரப்பு குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் பிரதமர் மோடியின் கூட்டு சதியை, இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அதானி முறைகேடுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.
இப்படி அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் எம்.பிகள் மீது தொடர்ந்து குறிவைத்து அவர்களது குரல்களை ஒடுக்கப்பார்கிறார்கள். அதானி மற்றும் பிரதமர் மோடி விமானத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து உப்புச்சப்பு இல்லாத வழக்கைக் காரணமாகக் காட்டி ராகுல் காந்தி இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் வரை சென்று போராடி இடைநீக்கத்தை திரும்பப்பெற வைத்தார். தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பா.ஜ.கவினர் குறிவைத்துள்ளனர்.
இவர் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் வாங்கியதாகப் பா.ஜ.கவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்த மஹுவா மொய்த்ரா, தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
மேலும், "நாடாளுமன்றத்தில் அதானி குறித்தும், பிரதமர் மோடி மற்றும் அதானியை இணைத்துப் பேசக்கூடாது என கடந்த மூன்று ஆண்டுகளில் 2 மக்களவை உறுப்பினர்கள் தன்னிடம் பேரம் பேசினார்கள். நான் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். யாரிடமும் பணம் வாங்கவில்லை. ஆனால் பா.ஜ.கவினர் பணம் வாங்கியதாக பொய் புகார்" தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!