Politics
INDIA கூட்டணியால் அச்சம் : CBSE பாட புத்தகத்தில் இந்தியா பெயரை நீக்க ஒன்றிய அரசின் NCERT பரிந்துரை !
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.
அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் "இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர். நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யவேண்டும்"என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியா என்ற பெயரைக்கண்டு பாஜகவினர் அஞ்சிவருவது வெளிப்படையாகவே தெரிந்தது.
இந்த நிலையில் CBSE பாட புத்தகத்தில் இந்தியா பெயரை நீக்க ஒன்றிய அரசின் NCERT பரிந்துரை செய்துள்ளது. NCERT என அழைக்கப்படும் ஒன்றிய அரசின் பாடதிட்ட குழுவின் ஆய்வுகூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்டைய வரலாறு பாடத்திட்டத்துக்கு பதில் செவ்வியல் வரலாறு என்ற பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், CBSE பாட புத்தகத்தில் உள்ள சமூக அறிவியல் பாடதிட்டத்தை மாற்றியமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதே போல பாடத்திட்டத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற பெயரை சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவுரைப் படியே இந்த மாற்றம் நடைபெறவுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!