Politics
மறுக்கப்பட்ட சலுகை : "இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டமே அக்னிபாத்" - ராகுல் காந்தி விமர்சனம் !
கடந்த வருடம் மாதம் ஒன்றிய அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.
மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த முதல் ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவருக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தை சேர்ந்தவர் லக்ஷ்மண் கவாட் என்பவர் 'அக்னிபாத்' திட்டத்தின்படி, ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
அவர் சியாச்சின் பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆனால் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஓய்வூதிய பலனோ, மருத்துவ உதவி உத்தரவாதமோ, ராணுவ கேன்டீன் பயன்பாடோ கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டமே அக்னிபாத் திட்டம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சியாச்சினில் அக்னிபாத் வீரர் அக்ஷய் லட்சுமணன் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இளைஞர் ஒருவர் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பணிக்கொடை இல்லை, அவரது சேவையின் போது வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டமே அக்னிவீரர் திட்டம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!