Politics
மோடியின் சமூகம் என்ன?சாதிவாரி கணக்கெடுப்பில் அவரின் பொய் அம்பலப்படும் -JDU மூத்த தலைவர் விமர்சனம் !
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்
21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர். இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் என்பதும் தெரியவந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பாஜகவில் பலர் எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர் என பொய்யாக கூறி வருகிறாரா என ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் நீரஜ்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "2019-ம் ஆண்டு கன்னோஜியில் பேசும் போது பிரதமர் மோடி தம்மை ஓபிசி- இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதி மோத் காஞ்சி. இந்த சமூகம் சமூக ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பிற்படுத்தப்பட்ட ஜாதிய பிரிவுகளில் வருவது இல்லை.
அப்படியான நிலையில் மோடி எப்படி ஓபிசி பிரிவில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும்? அந்த ஜாதி எப்படி ஓபிசி பட்டியலில் சேர்ந்தது?அப்படி செய்திருந்தால் அந்த அறிக்கையை வெளியிடுவார்களா? மோடி ஓபிசி அல்ல.மோடி முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர் தங்களை முற்படுத்தப்பட்ட வகுப்பினராகத்தான் அறிவித்து கொண்டார்கள். அப்படியானால் மோடி தம்மை ஓபிசி என பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாரா? பிரதமர் மோடியின் உண்மையான சமூகம் எந்த பிரிவின் கீழ் வருகிறது என்பது அம்பலமாகிவிடும் என்பதாலேயே சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு