Politics
புறக்கணிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்.. பாஜகவில் வெளிப்படையாக வெடித்த உள்கட்சி மோதல்: ராஜஸ்தானில் பரபரப்பு!
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலைத் தொடர்ந்து மிசோரம், சத்தீஸ்கர், மத்திய, பிரதேசம் தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் படி ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதனிடையே பாஜக அங்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஆனால், இந்த பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாதது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.
அதிலும், அங்கு வசுந்தரா ராஜேவின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சரின் பெயர் பட்டியலில் இடம்பெறாததால் அவர் வசுந்தரா ராஜேவை நேரடியாக வந்து சந்தித்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமன்றி அங்கு முக்கிய பாஜக தலைவர்கள் வெளிப்படையாக தங்கள் பகுதியின் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பேசியுள்ளது அக்கட்சியின் உற்கட்சி மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளது.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்