Politics

"ஏழைகளின் விடுதலைக்கான சக்திவாய்ந்த ஆயுதம் சாதிவாரி கணக்கெடுப்பு": ராகுல் காந்தி MP நம்பிக்கை!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி எம்.பி, "ஏழைகளில் விடுதலைக்கான சக்திவாய்ந்த நடவடிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு. இதை ஒன்றிய பா.ஜ.க அரசு நடத்தவில்லை என்றால் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி நடத்தும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால் நாட்டின் வளர்ச்சியையும், பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தும். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும் என்பதில் ஒருமனதாக உள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்பைத் திசை திருப்பப் பிரதமர் மோடி பிரச்சனைகளைத் திசை திருப்பி வருகிறார். வரும் நாட்களில் இதேபோன்ற சந்திரங்களை அவர் மேலும் மேலும் செய்வார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 முதல்வர்களில் மூன்று பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் 10 பேர் முதல்வர்களாக இருக்கும் பா.ஜ.கவில் ஒருவர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். அவரும் விரைவில் முதல்வராக முடியாது.

நவம்பரில் நடக்க உள்ள 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். காங்கிரசுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. இந்தியா முழுவதும் பா.ஜ.கவால் உருவாக்கப்பட்ட வன்முறை, வெறுப்பு, அச்சம் போன்றவற்றை மக்கள் விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: "பா.ஜ.கவுக்கு முட்டுக்கொடுக்கும் அதிமுக'.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!