Politics
பீகாரைத் பின்பற்றும் ராஜஸ்தான்.. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக மாநில காங்கிரஸ் அரசு அறிவிப்பு !
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்
21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர். இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் என்பதும் தெரியவந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தை பின்பற்றி ராஜஸ்தான் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " பீகாரைப் போல ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டில் பல்வேறு சாதிகள் உள்ளன. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பல்வேறு சாதியினர் பலவகையான தொழில்களைச் செய்கின்றனர். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்க முடியும். சாதிவாரியாக திட்டங்களை வகுப்பது எளிதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!