Politics
கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு 11 MLA-க்கள் எதிா்ப்பு - மஜத மாநில தலைவரின் கருத்தால் பரபரப்பு !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத்தும் அக்கட்சியில் இருந்து விளங்குவதாக அறிவித்தார். இப்படி முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு 11 எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா் என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி மாநிலத் தலைவா் சி.எம்.இப்ராஹிம் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு மாநில அளவிலான செல்வாக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என கேரள நிர்வாகிகள் கூறிவிட்டனர்.
மகாராஷ்டிரா நிர்வாகிகளும் பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜகவின் கொள்கையை மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்றுக்கொண்டுவிட்டதா என்பது தெரியவில்லை. கூட்டணி மூலம் கட்சியை ஒழிப்பதே பாஜகவின் உள்நோக்கம். இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் 11 எம்எல்ஏக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?