Politics
வலுவடையும் 'INDIA' கூட்டணி.. சிதையும் பாஜக கூட்டணி.. NDA கூட்டணியில் இருந்து விலகிய பவன் கல்யாண் கட்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். பலர் நமது நாட்டின் பெயர் இந்தியாவே இல்லை பாரதம் என்றும் கூறி வருகின்றனர்.
அதே நேரம் பாஜக சார்பில் இந்தியா கூட்டணியை உடைக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறது. இதற்காக அமலாக்கதுறை, சிபிஐ அதிகாரிகள் மூலம் இந்தியா கூட்டணி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகின்ற்னர். எனினும் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வண்ணம் உள்ளன.
மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தியா கூட்டணி விரைவில் உடைந்துவிடும் என கூறி வரும் நிலையி, அதற்கு மாறாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்து வருவது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியான அதிமுக விலகுவதாக அறிவித்தது. இது இந்தியாவில் பாஜக மீதான நம்பிக்கையை பெரிய அளவில் சாய்த்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் பாஜகவுக்கு இருந்த ஒரே வலுவான கூட்டணி கட்சியும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல கட்சிகள் பாஜகவுடனான கூட்டணியை முறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?