Politics
“பா.ஜ.க கூட்டணியில் இனி எப்போதும் சேரமாட்டேன்” - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ்குமார் !
பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.
இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் முன்பே செய்திருந்த ஒப்பந்தத்தின் படி நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அவரது அரசுக்கு பாஜக பல்வேறு இடர்களை கொடுத்தது.
இதன் காரணமாக பா.ஜ.க கூட்டணியில் இருந்த அந்த கட்சி வெளியேறி லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். மேலும், தற்போது 'இந்தியா' கூட்டணி அமைந்ததற்கு நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார். ஆனால், நிதிஸ்குமார் 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணையவுள்ளதாக பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூறி வந்தனர்.
இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் இனி எப்போதும் சேரமாட்டேன் என நிதிஷ்குமார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிதிஷ்குமாருடன் செய்தியாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதிஷ்குமார், "இது அர்த்தமற்ற பேச்சு.அப்படி எந்த திட்டமும் இல்லை. பா.ஜ.க கூட்டணியில் இனி எப்போதும் சேரமாட்டேன்" என பதிலளித்தார்.
அதன் பின்னர், 'இந்தியா' கூட்டணி சார்பில் பிரதமர் வேற்றாளராக நிற்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கமளித்த அவர், "எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்" என தெளிவுபடுத்தினார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு