Politics
மதத்தை குறிப்பிட்டு அநாகரிகம் : நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியை அவதூறாக பேசிய பாஜக எம்.பி !
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (இன்று) வரை நடைபெறவுள்ளது. தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய முன்தினம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையில் அனைவர் ஆதரவோடு நிறைவேறியது.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உலகையே திரும்பி பார்க்க செய்தது இந்தியா. இந்த பெருமைக்குரிய நிகழ்வுக்கு முழு காரணமும் இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள்தான் என்று அனைவரும் பாராட்டி வந்தனர்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பாராட்டு தெரிவித்து உரையாற்றினர். அந்த சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜகவை சேர்ந்த எம்.பி., ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பி அவ்வாறு பேசியதும் மக்களைவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு பதில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்டார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜக, தாங்கள் வெறுப்புணர்வை தூண்டுவதில்லை என்றும், இஸ்லாமியர்களும் இந்நாட்டவர்கள் என்றும் போலியாக பிரச்சாரம் செய்து கூறி வருகின்றனர். எனினும் அவர்கள் உள்ளே முழுக்க முழுக்க வெறுப்புணர்வு மட்டுமே இருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்புணர்வை தூண்டி வரும் பாஜக, தற்போது அதனை நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்துள்ளது. நாளுமன்றத்தில், அதுவும் சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி, பிற கட்சியை சேர்ந்த இஸ்லாமிய எம்.பியை பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளது எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியிலும் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!