Politics
“பாஜக பொய்சொல்வதில் கைதேர்ந்தது, அந்த சாரம்தான் தமிழிசைக்கும்..” - நாராயணசாமி விமர்சனம் !
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. உரிய நேரத்தில் புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் இருவர் பலியாகி உள்ளனர். இந்த அரசு மெத்தனத்தாலும், சுகாதாரத்துறையினரின் காலந்தவறிய நடவடிக்கை தான் டெங்கு அதிகரித்தற்கு காரணம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது, “நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் வெற்றி நாட்டு மக்களின் வெற்றி. மோடியோ, பாஜகவோ இதற்கு சொந்தம் கொண்டாடக்கூடாது. இதனைகொண்டு பாஜகவினர் விளம்பரம் தேடிக்கொள்ள பார்க்கின்றார்கள். இது கண்டனத்திற்குரியது.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. உரிய நேரத்தில் புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் இருவர் பலியாகி உள்ளனர். இந்த அரசு மெத்தனத்தாலும், சுகாதாரத்துறையினரின் காலந்தவறிய நடவடிக்கை தான் டெங்கு அதிகரித்தற்கு காரணம்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நிரந்தரமாக புதுச்சேரியில் தங்கி அரசியல் செய்கிறார். தொடர்ந்து தமிழக அரசைப்பற்றி தவறாக விமர்சிக்கின்றார். இது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட்ட உரிமைத்தொகை முறையாக வழங்கப்படுகின்றது. ஆனால் புதுச்சேரியில் முறையாக வழங்கி விட்டதாக தமிழக அரசை குறைக்கூறி அப்பட்டமான பொய்யை தமிழிசை செளந்தரராஜன் கூறி வருகிறார். ஆனால் முதல்வர் ரங்கசாமி அறிவித்த திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.
75 ஆயிரம் குடும்பத் தலைவிகளில் இதுவரை யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. பாஜக பொய்சொல்வதில் கைதேர்ந்தவர்கள். அந்த சாரம் தமிழிசைக்கும் உள்ளது. தமிழிசை செளந்தரராஜன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க பார்க்கிறார். அவர் எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வியைதான் தழுவுவார்.
புதுச்சேரி மாநிலத்தில் 75 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை கொடுத்ததாக கூறும் தமிழிசை அதனை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் தனது 2 மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரங்கசாமி எப்போதெல்லாம் முதலமைச்சராக வருகின்றாரோ அப்போதெல்லாம் மாமுல் கேட்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது குறித்து எம்.எல்.ஏக்களே நேரில் சென்று புகார்கொடுத்துள்ளார்கள். ஆனால் அதை திறம்பட கையாள முடியாத முதல்வராக ரங்கசாமி உள்ளார்.” என்றார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!