Politics

“பாஜகவினரின் ஆசை இந்த முறை வடக்கேயும் எடுபடாது..” - தி.க. தலைவர் கி.வீரமணி தாக்கு !

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரியில் அக்கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழு மற்றும் மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “பாஜகவினரின் ஆசை இந்த முறை நிராசையாகும் ஏனென்றால் பாஜகவினர் பற்றி வடக்கேயும் மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அண்ணாமலை பயணமும் பேச்சும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எதையாவது சொல்லி அதற்கு யாராவது பதில் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஏக்கத்திற்கு நான் தண்ணீர் தர விரும்பவில்லை.

ஆதி திராவிடர் மக்களை கேவலமாகவும் அம்பேத்கரைப் பற்றி இழிவாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பேசியுள்ளார். அவருக்கு வயது 72. அவர் ஒன்றும் இளைஞர் கிடையாது. அப்படிப்பட்டவர் திட்டமிட்டு எவ்வளவு தரகுறைவாக பேசியுள்ளார். மக்களிடம் வெறுப்பு பிரச்சாரத்தை அவர் விதைக்கிறார். வேகமாக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறிய அவர் இதுபோன்று அவர்கள் பேசுவதற்கு காரணம், மோடி ஆட்சியில் ஊழலை மறைப்பதற்காக அவர்கள் இதுபோன்று தேர்தல் சமயத்திற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அவர்கள் பேசுவது பயன்படவில்லை என்றாலும் வடநாட்டில் அவர்கள் பேசுவது பயன்படும் என்று ஆசையில் அவர்கள் உள்ளனர். பாஜகவினரின் ஆசை இந்த முறை நிராசையாகும் ஏனென்றால் பாஜகவினர் பற்றி வடக்கேயும் மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்" என்றார்.

Also Read: ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ : அன்று ஆய்வு.. இன்று அரசாணை.. திராவிட மாடலை பின்பற்றும் தெலங்கானா !