Politics

சனாதனத்தை நிலை நிறுத்த முயன்றால் இந்தியா நொறுங்கிவிடும் - பாஜக அரசை விமர்சித்த வைகோ !

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட, திரு.வி.க.நகர் தெற்கு பகுதி திமுக சார்பில் ஓட்டேரி ஐந்து விளக்கு பகுதியில், தெற்கு பகுதி செயலாளர் சாமிகண்ணு தலைமையில் தமிழன் உயிரைக் குரல் கொடுத்தவர், தாய் போல் கலைஞர் அரவணைத்தவர் என்னும் பெயரில் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”சந்திரகுப்தர் மௌரியர் என இந்திய வடப் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் வைத்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டு அரசர்கள் கங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளனர்.

மலேசியா, தாய்லாந்து என வெளி நாடுகளை கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் சேர, சோழ பாண்டியர்கள். இந்த நிலையில் தற்போது பாரதம் என்ற சானத்தனதை நிலை நிறுத்தினால், இந்தியா துண்டு துண்டாக போய் விடும் என்பதை தற்போது உள்ள ஆட்சியாளர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த என்பது ஒரு நாடல்ல, அது மாநிலங்களால் இணைத்த ஒன்றியம், மாமன்னன் அசோகன் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை, சக்கரவத்தி அக்பர் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை, பிரிட்டிஷ் காலத்தில் பலதரப்பட்ட நிகழ்வுக்கு பிறகு இந்தியாவை ஒன்றியமாக உருவாக்கினர்.

என்றைக்கு பாரத் என்று சொல்ல ஆரம்பித்து,ஹிட்லர், முசோலினி போன்று சர்வாதிகார மாறி இவர்களால் செயல்படுவதால் இந்திய என்பது சுக்குநூறாக நொருங்கிவிடும்” என்று தெரிவித்தார். கடந்த சில நாட்களாக நாட்டின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதனை வைகோ இவ்வாறு விமர்சித்துள்ளார்.

Also Read: வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை.. தொழில் கூடம் இருந்ததற்கான அடுத்த ஆதாரமா ?