Politics
ஒரே ஆண்டில் 1000 கோடி சம்பாதித்த பாஜக.. ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 6,046 கோடியாக உயர்வு.. அதிர்ச்சி அறிக்கை
மத்தியில் பா.ஜ.க தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக பாரதிய ஜனதா கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவிலான நிதியுதவி வழங்குவதாகப் புகார் எழுந்தது.
அதிலும் முக்கிய கார்ப்பரேட் கம்பெனிகளின் வராகடனை தள்ளுபடி செய்து வந்த பாஜக, பின்னர் அந்த நிறுவனங்களில் இருந்து தேர்தல் பத்திரங்கள், கட்சி நிதி என ஏராளமான நன்கொடைகளை பெற்றது அம்பலமானது. இந்த நிதியை பயன்படுத்தி பிற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி-களையும் வாங்கியதும் பின்னர் தெரியவந்தது.
இந்த நிலையில், பாஜகவின் சொன்னது மதிப்பு ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தேசிய கட்சிகளில் மிக அதிக சொத்து மற்றும் கையிருப்பு கொண்ட கட்சியாக பாஜக திகளாகியது. அந்த கட்சியில் சொத்து மதிப்பு ரூ.4,990 கோடியிலிருந்து ஒரே ஆண்டில் 21.17 சதவீத உயர்வோடு ரூ.6,046 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் சொத்துமதிப்பு 16.58 சதவீதம் உயா்ந்து ரூ.691.11 கோடியிலிருந்து ரூ.805.68 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.71.58 கோடி கடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.732.79 கோடியிலிருந்து 690.71 கோடியாக குறைந்துள்ளது.
இதில் பல வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை விட சில ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜகவின் சொத்துமதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பாஜக பல ஆயிரம் கோடி நிதி பெறுவது உறுதியாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!