Politics

ஒரே நாடு -ஒரே தேர்தல்: ஒன்றிய அரசு அமைத்த குழுவில் 90% பாஜக ஆதரவாளர்கள்.. விலகிய எதிர்க்கட்சி உறுப்பினர்!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு நடத்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் 90% பேர் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பாஜக அரசின் முடிவை ஆதரிப்பவர்களாவர்.

இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒராண்டுக்கு முன்னதாக வெளியேறி பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்துவரும் குலாம் நபி ஆசாத் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவர் 'ஒரே தேர்தலுக்கு முழு எதிர்பில்லை' என்கிற கருத்தை முன்பே தெரிவித்துள்ளார்.

மேலும், குழுவில் இடம்பிடித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாஜ்பாய் ஆட்சியின் போது சொலிசிட்டராக இருந்தவர். இவர் 370 சிறப்பு அதிகாரம் நீக்கம், டெல்லி அதிகார பறிப்பு வழக்குகளில் பாஜக அரசுக்கு ஆதரவாக தற்போது வாதிட்டு வருகிறார். அதே போல மற்றொரு உறுப்பினர் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் மக்களவை செயலாளரான இருந்தபோது 2021 ஆம் ஆண்டு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். பாஜகவின் நுபுர் சர்மா நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு ஒரே தேர்தலுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார்.

மற்றொரு உறுப்பினரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.கே.சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் 2014ல் பாஜகவில் இணைந்தவர். அதன் பின்னர் 2017 முதல் 2020 வரை 15வது நிதிகுழு தலைவராக இருந்தவர். ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலாளாரகவும் பணியாற்றியுள்ளார்.இவர்கள் அனைவருமே பாஜகவின் ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்று கூறப்படுகிறது.

adhir ranjan chowdhury

இந்த நிலையில், இண்டிகா குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே எதிர்கட்சி உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் சௌத்தரி, ஒரே தேர்தல் குறித்த ஆய்வு என்பதே கண்துடைப்பு என்று கூறி குழுவிலிருந்து வெளியேறுவதாக ஒன்றிய பாஜக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரிய, நடைமுறை ரீதியாக சாத்தியமற்ற மாற்றங்களை அரசு செய்கிறது. செயல்படுத்த

தேசத்தின் மீது இதனை திணிக்கும் திடீர் முயற்சி, அரசாங்கத்தின் மறைமுக நோக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இந்தச் சூழ்நிலையில், உங்கள் அழைப்பை நிராகரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: பா.ஜ.க.வின் அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !